Friday, July 17, 2009

சமயபுரத்தாளே சாட்சி : சமயபுரத்து நாயகியே....!



சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!

வேப்பஞ்சேலை உடுத்திய பேருக்கு
காப்பாய் நிற்கும் தயவல்லவோ?!
உரியவர்கருளும் பெரியபாளையத்
திருநகர் வாழும் தாயல்லவோ?!
கேட்டை களையும் கோட்டை மாரியாய்
சேலத்தில் வளரும் சுடரல்லவோ?!
பால் குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும்
கோலவிழி அம்மன் அவளல்லவோ?! (சமயபுரத்து)

ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும்
வேற்காடமர்ந்த அருளல்லவோ?!
ஆலயம் மன்ன திருப்பெயர் விளங்க
அருமறை பாடும் பொருளல்லவோ?!
தருமத்தைக் காப்பாள் துயர்களைத் தீர்ப்பாள்
துர்க்கை பவானி அவளல்லவோ?!
கருமத்தி நீக்கி கவலையைப் போக்கி
கை கொடுக்கும் குளிர் நிழலல்லவோ?!

சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!
சமயபுரத்தாளே சாட்சி!

நன்றி : அம்மன்பாட்டு

2 Comments:

நாமக்கல் சிபி said...

ஆடி 1 க்காக இந்த அம்மன் பாட்டு!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Last 25 songs posted in Thenkinnam