என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே
(என்னவோ..)
மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா
(என்னவோ..)
இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா
ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
(என்னவோ..)
ப்ரியமானவளே
ப்ரியமானவளே..
படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்
Friday, July 3, 2009
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
பதிந்தவர் MyFriend @ 6:50 AM
வகை 1990's, SA ராஜ்குமார், கேகே, மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment