Saturday, July 4, 2009

எனக்கொரு சினேகிதி



எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
(எனக்கொரு..)

மேகமது சேராது வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
வார்த்தைகள் வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிடுமே
(எனக்கொரு..)

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சினுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
அன்பை தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் பேசினால் விறகும் வீணையாகும்
(எனக்கொரு..)

படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடிரவர்கள்; ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam