Saturday, November 21, 2009

ஜக்குபாய் - ஏழு வண்ணத்தில்



ஏழு வண்ணத்தில் கன்னிப்பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல் அதைக்காத்து நிற்பேனே
(ஏழு..)
நடக்கும் திசைப்பார்த்து தான்
நிழல் போல் நான் வருவேன்
தினம் பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
காலாட்டி நானும் இரசிப்பேன்
(ஏழு..)

மூங்கில் போல வாழ்ந்திருந்தேன்
மரங்கொத்திப்போல வந்துப் புல்லாங்குழல் செய்துவிட்டாய்
என்னை நீயே
தோட்டம் விட்டு ஓடிவந்து எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே
தொட்டிச்செடி ஆகிவிட்டாய் பெண்ணே நீயே
கண்களின் நேரிலே கனவைப் பார்க்கிறேன்
கண்ணன் போல இருப்பேன் காத்துக்கிடப்பேன்
உந்தன் தேரோட்டி நானடி
(ஏழு..)

நான் ரசிக்கும் நாயகியே
நாகரீக தேவதையே இரவிவர்மன் தூரிகையே நீயே நீயே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்துக் கண்கள்
இரண்டை மூடிக்கொண்டுக் கண்ணாமூச்சி ஆடவேண்டும்
வா வா நீயே
கண்ணாடி மாளிகை கை வீசிப் போகுதே
உன்னோட அழகை பாடல் எழுத
தமிழில் வார்த்தைகள் தேடினேன்
(ஏழு..)

படம்: ஜக்குபாய்
இசை: ராஃபி
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam