Wednesday, November 11, 2009

பேராண்மை - காட்டு புலி அடிச்சு



காட்டு புலி அடிச்சு காட்டு ராசா வாராண்டா
வீட்டுக்கு ஒருத்தன் வந்து
வெற்றி மாலை போடுங்க போடுங்கடா
(காட்டுப்..)

நாம கடவுள் பொறக்கும் முன்னே
இந்தக் காட்டுக்கு வந்தவுக
பல காட்டு விலங்கு செய்து இங்க கஞ்சி குடிச்சவுக
இயற்கைத் தாயின் சரக்கு
அட எங்க ஒடம்புல இருக்கு
பல கண்ணியின் தேனு இரண்டும்
எமக்கு தாய்ப்பால் தந்திருக்கு

விளையாடு துள்ளிப் பாடு
இந்தக் காடு எங்க வீடு
அந்த மலைங்க தூணுங்க
மலைங்க தூணுங்க
எங்க மரங்க குலுங்க மரங்க குலுங்க
இங்க கடவுள் பூமிங்க கடவுள் பூமிங்க
இங்க நதிங்க சாமிங்க
காட்டுப் புலிங்க எங்க விருந்து
சுத்துக்காத்து எங்க மருந்து
நாங்க மண்ணுலக் கெடக்கோம்
ஆனா அழுக்குப் படல
எங்க மூச்சுக் குழிய ஒரு புகையும் தொடல
மண்ணுக்கு நாங்க யாரும் உறம் போடவில்ல
காட்டு மனிதர்க்கு பதுனால உறம் போடவில்ல
பொதுவுடைமைச் சமுதாயம் தொலைந்துப்போகவில்ல
நாங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கம் மறுத்ததில்ல
(காட்டுப்..)

ஓ.. மலைநாடு தனிநாடு அங்க வீடு ஒருக்கூடு
இங்க காத்தும் தண்ணியும் இன்னும் கலங்கப்படல
இந்தப்ப்பச்ச மண்ணுல நெலப்பாதம் படல
எங்கப் பொழப்பு இந்தக்காடு எங்க ஒடம்பு முதலீடு
இந்த மண்ணின் வயசு எங்க மனுசன் வயசு
இந்த மலையின் மனசு எங்க மனுசன் மனசு
தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை
சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை
கடவுளுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்ல
எங்களுக்கும் மூலதானம் இல்ல
(காட்டுப்..)

படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ஜேஸ்ஸி கிஃப்ட், கேகே

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam