Friday, November 20, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - கண்ணில் தாகம் தீருமோ



கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா

கோபங்கள் பேசும் போது வேறெதைக்கூறும்
தேவைகள் பேசும் போது மோகம் கூறும்
மௌனம்தான் பாடவோ வலியெல்லாம் தரும் சுடராய்
இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர்த்தேடும் உயிர்த்தேசும் ஒரு கூந்தல் செய்வாய் நண்பா
(கண்ணில்..)

வீட்டின் தனிமையிலே தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால் முத்தம் பல பதிப்பவனே
சோலைப்பூவெல்லாம் ஆடையாய் சூடிப்பார்த்தவன்
மாமழை நேரங்கள் இதமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
வனம் கரைந்து சிரித்திட
(கண்ணில்..)

இருக்கிறேன் தனிமையிலே
ஏதோ ஒரு தேனெடுப்பேன்
பூவின் அசைவினிலே ஏதோ ஒரு பரப்பரப்பே
சொல்லும் வார்த்தைகள் காற்றிலே தேய்ந்துப்போகுதே போகுதே
சினேகம் வேறில்லை உண்மையே நெஞ்சம் தீண்டுதே
கண்கள் தீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியலை நினைத்திடு
நெஞ்சில் அச்சம் பொங்குதே ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே ஏனோ ஏனோ
(கண்ணில்..)

படம்: அச்சமுண்டு அச்சமுண்டு
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: சௌமியா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam