குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
(குருவாயூரப்பா..)
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில்
நாந்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம்
தீராதோ சொல் பூங்கொடியே
(குருவாயூரப்பா..)
ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாரலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவ செம்பூவே
என் தேகம் சேராதோ உன் கைகளிலே
(கூவாயூரப்பா..)
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
Wednesday, November 4, 2009
குருவாயூரப்பா குருவாயூரப்பா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில்
நாந்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம்
தீராதோ சொல் பூங்கொடியே//
இந்த பாடல் வரிகளில் செம ஸ்வீட்டூப்பா.. ரொம்ப டாங்க்ஸ்ங்க..
Post a Comment