Sunday, November 15, 2009

புன்னகை தேசம் - மழையே ஓ மழையே



மழையே ஓ மழையே.. புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்.. நிக்கவச்சு பாக்குறியே
(மழையே ஓ மழையே.. )

முத்து முத்து மல்லிகையாய் முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய் என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

மூங்கில்கள் புன்னகை செய்தால் குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால் சிற்பங்கள் ஆகும்
மரச்சட்டம் புன்னகை செய்தே நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே வைரமாக மின்னும்
நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால் இடம்மாறிப் போகும்
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால் தெய்வம் வந்து வாழும்
பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

பாடியவர் : சித்ரா
இசை: S.A. ராஜ்குமார்
படம்: புன்னகை தேசம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam