ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகானப் பொண்ணப் பார்த்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வச்சப் பொண்ணு எல்லாம் அத்தைப்பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே இரண்டுக்கண்ணு தான்
ஏண்டான்னுக் கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களுத்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்
(ஆடுங்கடா..)
சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட க்ளாஸுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பண்ணிக்கன்னு காதக்கிள்ளினாள்
பாம்புப் புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
பாம்புப் புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா கண்ணை மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்துப்பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கட்டுல சில்லரைய எடுத்து
நாட்டாமை திண்ணையில சீட்டாடலாம்
தந்தானே தந்தானே தந்தானேனானா
தந்தானே தந்தானே தந்தானேனானா
(ஆடுங்கடா...)
மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரித்தாளே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாலு இடுப்புல அஞ்சாறு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பாவாடைக் கட்டி வந்தாள் பச்சக்குதிர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண் கோழி எங்களோட ஆட்டத்தப்பார
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
(ஆடுங்கடா..)
படம்: நாடோடிகள்
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: வேல் முருகன்
Monday, November 16, 2009
நாடோடிகள் - ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
பதிந்தவர் MyFriend @ 2:06 AM
வகை 2009, சுந்தர் சி. பாபு, வேல் முருகன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment