ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றோ திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எறிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)
நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்
( ஒரு நாளுக்குள்..)
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
Sunday, November 8, 2009
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
பதிந்தவர் MyFriend @ 2:29 AM
வகை 2008, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment