Friday, January 23, 2009

898. பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் - நான் கடவுள்




பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள்விழியால் நோக்குவாய்
மலர்பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


(பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்)


படம்: நான் கடவுள்
பாடல்/இசை: இளையராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

1 Comment:

நித்தி .. said...

this is the same song of illaya raja's RAMANA MALAI alum..
the original version is even more sensitive with raja's voice...
Such a soothing song with blasting lyrics..
if possible try to put the original version... we can definetly feel the difference..
anyways amazing work done...
my hearty wishes....

Last 25 songs posted in Thenkinnam