Sunday, January 18, 2009

892. ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்


<p><a href="undefined?e">undefined</a></p>

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீல நயனம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன் தான் ரெங்கன் அரங்கன்
மறை நூல் ஞானச் சுரங்கன்
மது சூதன் மழைவண்ணன் திரு நாமம் பட பட இன்பம்
(ஹரி ஓம்..)

கோயிலில் நாள் தோறும் பூவாரம் சூட்டியே
பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அது போலே தாய் தன்னைப் போற்றியே
சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பனி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரைத் தாலாட்டும் தாயாகிப் போனானே
(ஹரி ஓம்..)

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன்
தாயெனும் மேலான அன்பை தான் காட்டியே
நேசங்கள் வளர்க்கின்றவன்
இதுதான் நல்ல குடும்பம் இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ணத்தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
(ஹரி ஓம்..)

படம்: ஆழ்வார்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், செந்தில் தாஸ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam