Monday, January 19, 2009

895. இல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்லுற உலகத்துல



இல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்லுற உலகத்துல
எப்படி நீ வாழ போற நண்பா?
உங்கிட்ட இருக்கிறதை பிடுங்கி விட்டு
இல்லாம ஆக்கி விட்டு ரோட்டுல அழைய விட்டுடுவான்

வேலை வேலை வேணுமுன்னு படிக்காம வேலை தேடினா
நீ நினைக்கிற வேலை கிடைக்காது நண்பா
உன் கிட்ட இருக்கிற திறமை எப்படி
வெளிப்படுத்தனும்ன்னு நினைக்கும்போது
வாழ்க்கையில் குழப்பம் வரும்பா

உன் அளவில்லா திறமை
உண்மையான கலையில் சம்பந்தப்பட்ட்டிருந்தா
அது என்ன தப்பா?
கலை இருந்தா ரத்தம் புத்தி சுவாசம் என்று சொல்லி
ரோட்டில் நீயே பைத்தியமாய் அலையிறியே நண்பா

இந்த கலைத்துறையில் நீயும் மேலே மேலே
முன்னேறனும்ன்னு நீ நினைக்கும்போது
அப்பத்தான் ஆபத்து உனக்கு நண்பா
உன்னை ஏத்திவிட்டவனே திருப்பி இழுத்து
கீழே தள்ளி மிதிக்கும் நேரம் வந்திடும் நண்பா

இது மட்டுமல்ல நீங்க கொஞ்சம் பொறுமையாக கேட்டால்
இதை அழகா தெளிவா சொல்வேனே அன்பா
இப்ப சொன்னது சொல்வது சொல்லபோறது
எல்லாமே உண்மை
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
அச்சம் ஏனப்பா?

நீங்க என்னத்தான் பாடினாலும்
எப்படி பாடினாலும்
கேட்க மட்டும் ஆளுருக்கியோ
இன்னும் வேணாம் வேணாம் சொல்லித்தானே
போடுற கூட்டங்களும் இன்னும் இன்னும் இருக்கு ஐயோ!

என்ன என்னத்தான் ஸ்கீலை வச்சி வேலையை காட்டினாலும்
ஏத்தி விட யாரும் இல்லைடா
நண்டு கதையை போல இன்னும் நடக்கும் வேளை
இதை நம்பி காலை வச்சிடாதடா

நீ விழுந்து விழுந்து திட்றமாதிரி நடிச்சா கூட
இங்கே எந்த விருதும் கிடைக்க போறதில்ல
இருந்தும் எம்.சி எடுத்து நடிச்சவங்க
வேலை போயி ரொம்ப பேரு தூங்குறாங்க வீட்டுக்குள்ளே

வழி என்ன வழி வேர்வை சிந்தும் கோடி துளி
இதற்கு என்ன விலை என்று கேட்டு பாரடி
ஆனா ஃப்ரீ ஃப்ரீ charity சொல்லி சொல்லி
கட்டிட்டாரு பேங்க்ல வீடு
வாங்கிட்டாரு Benz காடி

நீங்க தினம் தினம் கஷ்டப்பட்டு பாட்டை மட்டும்
பாடி மட்டும் காட்டிடாதீங்க
ஏன்னா நீங்க ரிலீஸ் பண்றதுக்குள்ளே
பாட்டு ரேடியோல ஓடும்
பாடகர் நீங்க இல்லைங்க

ஊரரும் மாறுது உலகம் மாறுது
நாமும் மாறுவோம் என்றூ ஆட்டம் போட்டவங்க
எல்லாரும் பின் போனது உண்டு
எதிர்காலம் இன்று நமக்கே எதிர்க்காலம் இல்லாமல் போனது

நிஜமெல்லாம் பொய்யாக ஆகும் வரையில்
உயிர் போகுது சமாதி ஆகுது
ஜிகு ஜிகு உடையில் அறைகுறை ஆட்டம்
இதற்குதானே சேருது கூட்டம்
உண்மைகளை இங்கு காணும் போலிஸ்
சிம்பளா அடிச்சா நாடகம் உன்னை நடிகன் நடிப்பு தூங்கும்

காசு இருந்தால் போதும் யாவரும் இங்கு ஹீரோவாகும் நேரம்
கலை காலம் சேர்க்க வேண்டும் என்று துடிக்கும்
பார் ஓடும் ஓட்டையான ஓடும் ஆசை கொண்டால் என்ன
சட்டில் குதிரை ஓட்டுவார்
ஆனால் பேச்சில் உலகை வாங்குவார்

போதும் போதும் நமக்கென்ன ஆகும்
வேற வேலை பார்ப்போம்
வேற வேலை பார்ப்போம்
என்று சொல்லி நாங்கள் போக மாட்டோம்
முட்டி முட்டி மோதி மோதி புத்திக்கு எட்டும்படி
பாட்டு பாடி குறை கூறி உண்மை சொல்லி
நீதி தேவி சாட்சி

இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சமென்பது இல்லை
உச்சி மீது வான் மீது விழுந்த போதிலும்
அச்சம் இல்லை


ஆல்பம்: குறை ஒன்றும் இல்லை
இசை: வாசன்
பாடியவர்கள்: வாசன், Rude Mack

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam