Sunday, January 18, 2009

890. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது



தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்

2 Comments:

pudugaithendral said...

அருமையான பாடல்.

பதிவிற்கு நன்றி

idhyam said...

//வேதங்களின் பாரயணம் //

பாரயணம் அல்ல பாராயணம்

//பூந்தென்றலே ஊர்கோலம் தான்//

பூந்தென்றலே அல்ல பூதேரிலே ஊர்கோலம் தான்!

Last 25 songs posted in Thenkinnam