ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்?
கண்ணில்லாது காணும் கனவு
எதைத் தேடி எங்கு போகும்?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்வார்?
(ஒரு காற்றில் அலையும் சிறகு)
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகளிருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ
(ஒரு காற்றில் அலையும் சிறகு)
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ?
(ஒரு காற்றில் அலையும் சிறகு)
படம்: நான் கடவுள்
பாடல்: வாலி
இசை/பாடியவர்: இளையராஜா
Friday, January 23, 2009
897. ஒரு காற்றில் அலையும் சிறகு - நான் கடவுள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment