Tuesday, January 27, 2009

910. ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா





ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

(ஏ ராசாத்தி)

கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
தூர இருந்தும் அருகில் இருப்போம்
தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்

ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
மின்னும் வெள்ளிமீண்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
எங்கும் இன்பம் பொங்கும்

(ஏ ராசாத்தி)

பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்

வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப்பூவனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் வாசல் முன்னே

(ஏ ராசாத்தி)


படம்: என் உயிர் தோழன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன் & குழுவினர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam