Friday, January 30, 2009

916. விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்





விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்
உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்
(விடிய விடிய..)

வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி
நினைத்தால் வாழ்க்கை இனிக்காது
உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட
என் மேல் நீர் அள்ளி தெளிக்குது
காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்
ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்
நீ வேர்வை ஓற்றிட கையை வைத்திடும்
கர்சீவ்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?
(விடிய விடிய..)

பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிக்கிறது
கன்னிப் பெண் போல எந்தன் கை படாது
நோட்டு உன்னால் நிரம்பியது
வேடிக்கை அல்ல விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்
வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்
நம் காதல் என்பது செய்தி ஆனதும்
நாடி மாறி ஆச்சு
நம் காதல் ஆசையை பூர்த்தி செய்ய
தேஐ இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே
(விடிய விடிய..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam