அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே..)
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
(என்னை காணவில்லையே..)
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்
Sunday, January 11, 2009
885. என்னை காணவில்லையே நேற்றோடு
பதிந்தவர் MyFriend @ 8:03 AM
வகை 1990's, AR ரஹ்மான், OS அருண், SP பாலசுப்ரமணியம், ராஃபி
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
இந்த பாடலில் துவக்கமே அன்பே..... என்று ஏக்கமாக ஆரம்பிப்பது ஆளையே அசத்திவிடும் குரல் பாலுஜியின் குரல். பதிவிற்க்கு நன்றி.
//நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே//
:)
Focus Lanka திரட்டியில் இணைக்க...
http://www.focuslanka.com
பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த ஏக்கக் குரல்!
அப்பா..,. அப்பப்பா...
எனக்கு 17 வயதில் செவித்திறன் போய்விட்டது! இப்பொழுது வயது 26. செவித்திறன் நனறாக இருந்த போது கேட்டிருக்கிறேன்! ஆனால் மறந்து விட்டிருந்தது! அருமையான பாடல்! மேலும் பாடல் வரிகளை எதிர் பார்க்கிறேன்! நன்றி!
Post a Comment