Tuesday, January 27, 2009

911. சந்தோஷ சாரல் தினம்





சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
(சந்தோஷ சாரல்..)

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
(சந்தோஷ சாரல்..)

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
(சந்தோஷ சாரல்..)

கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
(சந்தோஷ சாரல்..)
(அழகான சின்ன..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கங்கா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam