முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
(முஸ்தபா..)
ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)
இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி
Tuesday, January 6, 2009
876. முஸ்தபா முஸ்தபா
பதிந்தவர் MyFriend @ 9:05 AM
வகை 1990's, AR ரஹ்மான், வாலி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
i miss my friends............ toching lines............
this is song
this is song
Post a Comment