Saturday, January 17, 2009

889. நான் வரைந்து வைத்த சூரியன்


<p><a href="undefined?e">undefined</a></p>

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்து நின்ற காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே
(நான் வரைந்து...)

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியது
கம்பன் கிட்ட உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியதே
(ஜன்னல்...)
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக
தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில்
(நான் வரைந்து...)

பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
(பள்ளி...)
ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்
(நான் வரைந்து...)

படம்: ஜெயம் கொண்டான்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam