Monday, January 5, 2009

875 குழப்பமான குதுகுலம்



குழப்பமான குதுகுலம்

// மன்னிக்க வேண்டுகிறேன் >> தோள் கண்டேன், தோளே கண்டேன் >> சிரித்தால் தங்கப்பதுமை >> பார்வை யுவராணி கணோவியம் >> பூவும் பொட்டும் இங்கே >> மயக்கம் என்ன இந்த மவுனம் என்ன >> நீர்மேகம் ஆணால் என்ன >> ஞாயிறு என்பது கண்ணாக >> வாராயோ வென்னிலாவே.

Get this widget | Track details | eSnips Social DNA


தேன் கிண்ண நேயர்களே மேலே உள்ள பாடல்கள் தலைப்புகளை படித்திருப்பீர்கள். சரிதான் நீங்கள் நினைப்பது போல் நிச்சயம் இதிலும் ஒரு வில்லங்கம் இருக்கிறது. வில்லங்கத்தை விதையாக புதைத்து எடுத்து வந்தவர் நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல்.என் சாரேதான் சந்தேகமில்லை. முதலில் இந்த ஆக்கத்தை உருவாக்கியவருக்கு ( நற.. நற...) நன்றியை பாராட்டுக்களூடன் தெரிவித்துக்கொள்வோம். முடிவில் இப்படி தான் நீங்கள் நன்றியை தெரிவிப்பீர்கள். சரி விசயத்துக்கு வருகிறேன். // நூறாண்டு, கார்காலம், எதிர்பார்த்தேன், பிடிவாதம்// கேள்வியே இது தான். இந்த நாங்கு சொல்லும் மேற்கண்ட ஒன்பது பாடல்களில் மறைந்து இருக்கிறது எந்த பாடல் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.
அது தான் விளையாட்டு.

விளையாட்டு என்னவென்றால், நமது அறிவிப்பாளரே விள்க்க்க்க்க்க்க்க்க்கம்ம்ம்மாக ஒலித்தொகுப்பில் சொல்கிறார். இருந்தாலும் நானும் தெரிவிக்கிறேன். இந்த நாங்கு சொல்களூம் ஒவ்வொரு பாடலில் மறைந்து உள்ளது. அந்த பாடலின் படத்தின் பெயரில் உள்ள முதல் எழுத்து. நான்கு படங்களின் முதல் எழுத்தும் சேர்ந்து ஒரு படபெயரை தரும். அந்த படத்தின் பெயரை தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும். எனது வானொலி நண்பர்கள் “அசகாகய சூரர்கள்” பலபேர் மோதி ஒருவர் இரண்டே பாடலில் கண்டுபிடித்து விட்டார் அவருக்கு என் பாராட்டுக்கள். உங்களூக்கு எதுவும் புரியவில்லையா? சரி கோப்பை ஒலிக்கவிடுங்கள். பெயர் சொல்ல தயாராகுங்கள். கண்டு பிடித்து விட்டால் நீங்களும் அந்த அசகாய சூரர் பட்டியலில் இடம் பெற்றுவிடுவீர்கள். அந்த படத்தின் பெயர் என்ன? அதை கண்டுபிடித்த நபர் யார்? அதை தெரிந்துகொள்ள ஒலிகோப்பு முழுவது கேட்டுத்தான் தீரவேண்டும் வேறு வழியில்லை.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam