Monday, January 19, 2009

894. கனாக் காணும் கண்கள் மெல்ல

Listen to Agni Satchi Audio Songs at MusicMazaa.com


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
உலாப் போகும் நேரம் கண்ணே!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
***
படம் - அக்னி சாட்சி
குரல்கள் - S.P பாலசுப்ரமணியம், சரிதா
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - வாலி

1 Comment:

Anonymous said...

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!

ஆஹா வாலியின் வரிகளும், பாலுஜியின் குரலும் நம் மனதை காலி செய்துவிடும். அற்புதம் மிக அற்புதம். பாடலை பதிந்த ஜீவா விற்க்கு ஒரு ஜே...

Last 25 songs posted in Thenkinnam