தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
(தேவதை இளம் தேவி)
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
(தேவதை இளம் தேவி)
படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Saturday, January 24, 2009
904. தேவதை இளம் தேவி
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 8:25 AM
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment