Friday, January 23, 2009

901. கை வீசி நடக்கற காத்தே - நந்தலாலா




கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

அழகான கிளிக்குஞ்சே மெதுவா மெதுவா கிளையில் நடந்திடப் பழகு
சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானம் இன்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம்தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே


விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே



படம்: நந்தலாலா
பாடல்: பழனிபாரதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், சந்திரசேகர், ஸ்வேதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam