இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இருக்கிறது
உதிரப் போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
இசை : VS நரசிம்மன்
பாடியவர் : சித்ரா
தொலைக்காட்சி தொடர் : ரயில் சிநேகம்
Wednesday, June 17, 2009
ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாது
பதிந்தவர் G3 @ 9:30 AM
வகை VS நரசிம்மன், சித்ரா
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
இத இரசித்து கேட்டிருக்கேன்
இதன் முழு நாடகத்தையும் இணையத்தில் மீண்டும் பார்க்க கிடைக்குது.
நல்ல பகிர்வு.
பாஸ் இது ஒரு பழைய நாடகம்தானே சூப்பரூ! :)
நாடகத்தில் இடம்பெற்ற பாட்டா இது....மைபிரண்ட் தான் இந்தப் பாட்டை எனக்கு அறிமுகப்படுத்தினவா.
எனக்கு பிடித்த பாடல்!
ரயில் சினேகம் தொடரில் வருவது :)
எனக்கும் பிடித்த பாடல்..சின்ன வயசில் கே.பியின் நாடகம் பார்த்து கேட்டு இரசித்தப் பாடல் :-)
//இதன் முழு நாடகத்தையும் இணையத்தில் மீண்டும் பார்க்க கிடைக்குது.//
சுட்டி கிடைக்குமா ஜமால் ???
அட பிப்ரவரி 1... இதை கவனிக்க தவறிட்டேனே :-))
Post a Comment