கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..
படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்
Thursday, June 11, 2009
சிந்து பைரவி - கலைவாணியே
பதிந்தவர் G3 @ 12:43 PM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
சிந்து பைரவி - யேசுதாஸும் ராகதேவன் மொட்டை பாஸும் சேர்ந்து கலக்கிய படம் !
இந்த பாட்டும் சித்ராவின் முதல் தமிழ்பாட்டும் என்க்கு புடிச்ச பாட்டு!
:)
எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..
பகிர்விற்கு நன்றி ஜி3
எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..
பகிர்விற்கு நன்றி
Post a Comment