Monday, June 8, 2009

இதயத்தை திருடாதே - ஆத்தாடி யம்மாடி



ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... மலர்களும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சி எந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

என்னவோ... எண்ணியே...
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே


படம் : இதயத்தை திருடாதே
பாடியவர் : சிதரா
இசை : இளையராஜா

2 Comments:

உண்மைத்தமிழன் said...

சந்தோஷத்தை கிளப்புகிற பாடல்..

இளையராஜாவின் இசை ராஜாங்கத்தின் இது ஒரு சிறு துளி..

மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்..

ம்.. எல்லாம் ஒரு காலம்.. அவ்ளோதான்.. முடிந்தது முடிந்ததுதான்..

பகிர்ந்தமைக்கு நன்றி ஜி3.

Anonymous said...

:-) சூப்பர் பாடல்

Last 25 songs posted in Thenkinnam