Monday, June 22, 2009

நானும் ஒரு பெண் - கண்ணா கருமை நிறக் கண்ணா



பாடலை கேட்க முடியாவிட்டால் இங்கே கிளிக்குங்கள்

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
(கண்ணா...)

படம் : நானும் ஒரு பெண்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கண்ணதாசன்

2 Comments:

ஆயில்யன் said...

//மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுபோர்முன் கொடுத்தாய் கண்ணா///


:)


எனக்கு புடிச்ச பாட்டு படத்தில சிலை முன் நின்னு பாடும்போது செம சோகமா இருக்கும் :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பழைய பாடல்களில் இதுவும் ஒன்னு.

விஜயகுமாரி, ரங்காராவ் இருவரின் நடிப்பும் அருமையாய் இருக்கும், இந்தப் பாடல்களின் போது.

Last 25 songs posted in Thenkinnam