செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
அது என்னமோ என்னமோ ஹோய்
(செவ்வந்தி..)
கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)
ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், P சுசீலா
Monday, June 29, 2009
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
பதிந்தவர் MyFriend @ 8:52 PM
வகை 1980's, P சுசீலா, இளையராஜா, மலேசியா வாசுதேவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment