|
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
பாடு சுந்தரி.. சுந்தரி..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா.. சுவை காணவில்லையா..
ஆறாம் அறிவு கொண்டோம்.. அது ஒன்றே தொல்லையா..
எத்தனை கோடி இன்பம் இந்த மண்ணில் இல்லையா.. பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் தூண்டில் நாம் போட்டோம் இல்லையா..
வாழ்க்கையின் இன்பம்.. நாட்களில் இல்லை..
சில நாழிகை வாழும் சிற்றீசல் கூட தீபங்கள் தேடும்.. தேடும்..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது.. தளிர் வந்து சொன்னது
தொட்டாச்சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை... இன்றொரு வாழ்க்கை
எதுவாகிய போதும்.. நலமாய் இரு போதும்.. இதுவே என் வேதம்.. வேதம்..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..
படம் : வானமே எல்லை
இசை : மரகதமணி
பாடியவர் : சித்ரா
பாடல் வரிகள் : வைரமுத்து
2 Comments:
நான் பர்ஸ்ட்டு வாட்டி இந்த பாட்டை கேக்குறேன் !
நல்லா இருக்கு!
//புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு//
எத்தனை அழகான வார்த்தை “உன் பங்கை பூமியில் தேடு” - நமக்கு எதுவும் சொந்தமில்லை பங்கு பெற்றோம், பங்கிட்டோம், வாழ்வு முடிந்தால் பறந்துசெல்வோம்!
Best lyrics
Post a Comment