Wednesday, June 17, 2009

அபியும் நானும் - வா வா என் தேவதையே




வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

(வா வா என் தேவதையே)

வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா

(வா வா என் தேவதையே)

செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

(வா வா என் தேவதையே)

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

(வா வா என் தேவதையே)

படம்: அபியும் நானும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam