Friday, June 12, 2009

சூரியகாந்தி - பரமசிவன் கழுத்தில் இருந்து



பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

4 Comments:

ஆயில்யன் said...

கண்ணதாசன் அரசியல் பிரச்சனைகளால் சிக்கிகிடந்தப்ப எழுதிய பாட்டுன்னு பழைய கதை இருக்கு !

/மதியாதார் தலைவாசல் மிதிக்காதே//

எனக்கு புடிச்ச கான்செப்ட் :))

பெரியசாமி said...

------
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
--------
இந்த வரிகள் விளங்கவில்லை. கண்ணதாசன் எதை வைத்து இப்படி எழுதினாரோ?

Anonymous said...

இப்பாடல் ஒரு கணவன் மனைவி உள்ளப்பிரிவைக் காட்டும்படி எழுதப்பட்டாலும், அப்பிரிவு இடையில்மட்டும் வைத்துவிட்டு மற்றவிடங்களில் தன் வாழ்க்கைக்கொள்கையை விரிவுபடுத்துகிறார். இவரின் கொள்கை - இந்துத்வ வருணாஷிரமக்கொள்கை. அல்லது முதலாளித்துவக்கொள்கை. இதன்படி, சமூகம் உய்ர்தோர் தாழ்ந்தோர் பிரிவுகளைக்கொண்டதே. அப்பிரிவுகள் பல வடிவங்க்ளில் காணப்படும். வருண்ஷிரமத்தின்படி, நான்கு குழு அமைப்பு. அக்குழுக்குள் வராதா குலமற்றவரும்சேர்ந்து ஐந்தமைப்பு. இவ்வசிரமத்துக்குப்பால், பணம், பதவி, போன்ற பல கரணியங்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்தோர் - தாழ்ந்தோர் பிரிவு. கண்ணதாசன் பிறப்பால் வளர்ப்பால் வாழ்க்கை வசதியால் உயர்ந்தோர் பிரிவு. இவர்கள் கொள்கை என்னவென்றால், சமூகத்தில் பிரிவுகளை ஏற்றாகவேண்டும். எவரும் கேள்வி கேட்கக்கூடாது. ஏழை ஏழையாகவும் குலமற்றவன் குலமற்றானாக காலங்காலமாக இருக்க வேண்டும். அவர்கள் அப்படி இருக்க வேண்டுமென்பது இறைவன், மற்றும் சான்றோர்கள் சொன்னதாகவும், கடவுளே அதைக்காட்டியதாகவும் இக்கவிதை, அவ்வை, பரமசிவன், பாம்பு, கருடன் போன்ற உவமானங்களால் சொல்கிறது.
உயர்ந்தோருக்கு தாழ்ந்தோர் அடிமையாக என்று தண்டனிட்டுத் தொண்டு செய்து வாழவேண்டும். அவர்களோடு சமமாக உறவு கொள்வது எனப்து காலங்காலமாக அங்கீகரிக்கப்பட்டு வாழும் வழிமுறையைச் சிறுமைப்படுத்துவதாகும் என்று எச்சரிக்கிறார். இதற்கு காரணம் இவரின் அண்ணன் மகன் ஒரு தலித்துப்பெண்ணைக் காதலித்து இவர் என்ன சொல்லியூம் திருமணம் செய்துவிட்டான். அவன் பெயர் அழகப்பன். அப்பெண், மறைந்த இ. ஆ.ப அதிகாரியும் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளருமான மறைந்த சுப்பையா IAS. கண்ண்தாசனைப்பொறுத்தவரை தலித்து உயர்ந்தோர் ஆக முடியாது என்னதான் கல்வி கற்றாலும். இப்பாடல் கேட்க இனிமை. ஆனால் கருத்தை ஏற்பது அவரவர் தனிநபர் கொள்கையைப் பொறுததது.

jojo said...

கண்ண தாசன் அல்லவா நால் வருணக் கோட்பாடு பிடிக்காமலா இருக்கும்.

Last 25 songs posted in Thenkinnam