சின்ன மணிக் கோவிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு
தெற்கு திசை வழியே தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரைத் தீண்டி விடுமோ
(சின்ன மணிக் கோவிலிலே)
(சின்ன மணிக் கோவிலிலே)
அந்தப் பக்கம் நண்பனடி இந்தப் பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி சொல்லாதது மீதி
அந்தக் கண்ணில் கற்பனைகள்
இந்தக் கண்ணில் சஞ்சலங்கள்
ரெண்டையும் கண்டேன் நான்தான் இந்த நாளில்
எந்த வழி அமைப்பான் வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும் மானிடரின் ஜீவன்
உன் வசம் என் வசம் என்னதான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத் தானே
(சின்ன மணிக் கோவிலிலே)
நள்ளிரவு நேரத்திலே நட்டநடு வானத்திலே
வெள்ளி மீன் போலே நான்தான் உன்னைப் பார்த்தேன்
நித்தம் இங்கு வாசலிலே பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை நான்தான் என்றும் கேட்பேன்
அண்ணன் தங்கை உறவு இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து எப்பிறப்பும் இருக்கும்
வந்ததும் வாழ்ந்ததும் கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத் தானே
(சின்ன மணிக் கோவிலிலே)
படம் : வண்ண வண்ணப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
விரும்பிக் கேட்டவர் : ஜீவ்ஸ் (ஐயப்பன்)
0 Comments:
Post a Comment