Monday, February 25, 2008

286. காற்றில் வரும் கீதமே


Get this widget | Track details | eSnips Social DNA

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஆ..
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

3 Comments:

துளசி கோபால் said...

அருமை.

வேற ஒண்ணும் சொல்லத்தோணலை.

காதுலே அப்படியே அந்த ரீங்காரம்......

ஹைய்யோ.......

Unknown said...

super song

VSK said...

சேமிக்கப்பட்ட பதிவு!

ஒரே ஒரு திருத்தம்!

'வருந்தும் உயிர்க்கு' என வந்தால் பாட வசதியாக இருக்கும்.

Last 25 songs posted in Thenkinnam