|
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
(பார்த்தேன்..)
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட வைத்தாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்
மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை கொடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை
மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)
படம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு
3 Comments:
Thank you :-)
super song.. beautiful laila
அருமையான பாட்டு!
என் வாழ்க்கைல இந்த பாட்டுக்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கு!
Post a Comment