Monday, February 11, 2008

255. இளங்காத்து வீசுதே



இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

(இளங்காத்து)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னை மடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து)


ஓ! மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

(இளங்காத்து)

படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷல்

3 Comments:

வடுவூர் குமார் said...

பிடித்த பாடல்களில் செம பாட்டு இது.

வடுவூர் குமார் said...

சொல்ல மறந்திட்டேன்,
அந்த குழல் - ஆளை கொல்லுது.

தி.பா.ரமணி said...

மங்கையையும்,மதுவையும் எப்படித்தான் ஒரு பாட்டுக்குள் ஒளித்து வைத்தார்களோ ?

Last 25 songs posted in Thenkinnam