அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
(அழகு...)
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே
(அழகு...)
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே
(அழகு...)
விரும்பிக் கேட்டவர்: அன்புத் தோழி .:: மை ஃபிரண்ட் ::.
படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
Tuesday, February 19, 2008
271. அழகு நிலவே - பவித்ரா
பதிந்தவர் G3 @ 1:25 PM
வகை 1990's, AR ரஹ்மான், சித்ரா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நன்றி G3.. இந்த நேரத்துல இதை கேட்க ரொம்ப ஆனந்தமா இருக்கு
:-)
எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு..
///Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...
நன்றி G3.. இந்த நேரத்துல இதை கேட்க ரொம்ப ஆனந்தமா இருக்கு
:-)///
எந்த நேரமும் கேட்க இனிமையான பாடல்!!
இந்த படத்தில் ”உயிரும் நீயே” எனும் பாடலும் மிக அழகான பாடல்!!
அதையும் எப்போவாவது பதிவிடுங்களேன் ஜி3 யக்கோவ்!! B-)
பாடலுக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி. :-)
//அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே//
"அன்புதான் தியாகமே
அழுகைதான் தியானமே" என்று வர வேண்டும்.
//கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே//
"கடலை விடவும் ஆழம் எந்தன் கண்ணீர்த் துளி ஒன்றே" என்று வர வேண்டும்.
Post a Comment