Friday, February 15, 2008

267. ஒரு கிளி உருகுது



ஆனந்தக் கும்மியடி கும்மியடி
வானமெல்லாம் கேக்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டியெட்டிப் பாக்கட்டும்
தங்க ஜமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகைப்பூ மண்டபத்தில் இறைச்சிருக்க
முத்துமனித் தோரணங்கள் வீதியெல்லாம் உயிர்த்திருக்க
அன்னங்களும் குடைப் பிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

(ஒரு கிளி உருகுது)

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக் கனவை
விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

படம்: ஆனந்த கும்மி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி

4 Comments:

Anonymous said...

இந்த பாடலின் வரிகளில் சில பிழைகள் உள்ளன

ஓ மைனா மைனா என்று முடிக்கப்பட்டுள்ளது

'ஓ மைனா 'ஓ' மைனா' என்று முடிய வேண்டும்

கடைசி வரி "மலர்களின் "வெளிகளில்" இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா"
என்று இருக்க வேண்டும்

இம்சை அரசி said...

நன்றி :)))

உண்மைத்தமிழன் said...

அருமையான பாடல் இம்சை அரசி.. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் இசை..

ம்.. எல்லாம் ஒரு காலம்..

Thanjavurkaran said...

ஷைலஜாவை விட்டு விட்டீர்களே

Last 25 songs posted in Thenkinnam