Tuesday, February 12, 2008

258. ஆராரிராரோ நான் இங்கு பாட



ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

(ஆராரிராரோ)

படம்: ராம்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல்: சிநேகன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam