Monday, February 4, 2008

236. விண்ணோடும் முகிலோடும்


Puthayal-VinnodumM...

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இசை அமுதே..
(விண்ணோடும்..)
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுப்போல்
ஓடோடி வந்த சொர்க போகமே
ஓடோடி வந்த சொர்க போகமே
காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதை ஊற்றும் யோகமே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

படம்: புதையல்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: CS ஜெயராமன், P சுசீலா

விரும்பி கேட்டவர்: அனுசுயா

3 Comments:

அனுசுயா said...

நன்றி மை ப்ரெண்ட் கேட்டவுடனே பாடல் வழங்கியதற்கு. இந்த பாடலை நான் தேடி கிடைக்கவில்லை. நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லப்பாட்டு .. நன்றி கூடப்பாடும் சுகமே சுகம்.. அதுக்கு வரிகள் தருகிற தேன்கிண்ணத்திற்கு நன்றிகள்.

MyFriend said...

@அனுசுயா:

பாடல் உங்கள் ஈமெயிலுக்கும் அனுப்பப்பட்டிருக்கு.. எஞ்சாய்.. :-)

@ முத்துலெட்சுமி:

நன்றி ஹை. :-)

Last 25 songs posted in Thenkinnam