பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே
ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே
பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
(ஏதோ மோகம்)
ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது
(ஏதோ மோகம்)
படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கிருஷ்ண சந்தர், ஜானகி
1 Comment:
nice song...
இதே பாடல் ரீமிக்ஸ் வெர்ஷன்ல யுகேந்திரனும் மலேசிய சக்ராசோனிக்கும் பாடியது எல்லா இடத்திலும் சக்கை போடு போட்டது.. அதுவும் கேட்டுப்பாருங்க. :-)
Post a Comment