Friday, February 29, 2008

296. கொஞ்சும் மைனாக்களே





கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட
இன்றே வரவேண்டும்
என் தீபாவளிப் பண்டிகை

இன்றே வரவேண்டும்
என் தீபாவளிப் பண்டிகை

நாளை வெறும் கனவு
அதை நான் ஏன் நம்பனும்?
நான் நட்டதும் ரோஜா
இன்றே பூக்கனும்!!

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...ஹே..

பகலில் ஒரு வெண்ணிலா
வந்தால் பாவமா?
இரவில் ஒரு வானவில்
வந்தால் குற்றமா ?

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா ?
கனவே கைசேர வா

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்


என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் தம்
மனசுக்குள் தாம் தோம் தீம்

பரதம் தாம் தாம் தாம்
மனசுக்குள் தாம் தோம் தீம்


பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து
எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு
இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு.


பாடியவர். சாதனா சர்கம்
வரிகள் . வைரமுத்து
இசை . ஏ.ஆர். ரகுமான்
விரும்பிக் கேட்டவர் - இம்சை அரசி
படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam