Sunday, February 24, 2008

282. சுட்டும் சுடர்விழி பார்வையிலே




சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டு வைத்து
பவழப்பட்டும் கட்டி
அருகில் நிற்கும் உன்னை
வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும் சுடர்விழி)

உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்(2)
உன் சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே ப்ரியமே சகி

சுட்டும் சுடர்விழி நாள்முழுதும் தூங்கலையே கண்ணா
தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

இருவிழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
உள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
விண்ணுலகம் எரியுதே பெளர்ணமி தாங்குமா
இங்கு எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ
கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

(சுட்டும் சுடர்விழி பார்வையிலே)


படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
பாடியவர்: M.G.ஸ்ரீகுமார், சித்ரா

விரும்பிக் கேட்டவர்: கோபிநாத்

1 Comment:

கோபிநாத் said...

மிக்க நன்றி கப்பி ;))

ரொம்ப மகிழ்ச்சி ;)

Last 25 songs posted in Thenkinnam