Sunday, February 3, 2008

235. அத்திக்காய் காய் காய்


Bale Pandiya _-_At...

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏழக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
(உள்ளதெல்லாம்..)
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: யோகேஷ்

8 Comments:

Yogi said...

ரொம்ப நன்றி மைபிரண்ட் :)

ஆயில்யன் said...

//வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
//

NALLARUKU :)

Anonymous said...

ஏழக்காய் வாசனைப்போல்

Yelakkai not Yezhakkai - i think.

With Love,
Usha Sankar.

Iyappan Krishnan said...

http://groups.google.ge/group/muththamiz/msg/57ea5a284ab307a2

அத்திக்காய் பாடலுக்கு இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.கண்ணதாசனின்
கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம் இப்பாடலில் தெரியவருகிறது...

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது ஆண்...முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலாமுகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள்
என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்
இந்தப்பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?

பெண்---

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப்பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக
இருக்கிறாள்(பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு

ஆண்..
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)
பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு

இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக

நீயு ம் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்
நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு
பெண்-
-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா
அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?

என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?
என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?
(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்
ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு
(இதில்
இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)
ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்
ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய
ஒளிவீசு

(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்
மணக்கட்டும் என இருக்கலாம்)

இரண்டாவது ஜோடி
ஆண்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணீலா
இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு
சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே
கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரித்தாயே
பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல)
கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா
கோதை என்னைதிட்டாதே கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா

கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
எங்க இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்
இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்
(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா
சொல்லிவிட்டார்கள்!!:))

கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் நாலு பேராவது கண்டுக்குங்க ப்ளீஸ்!

Anonymous said...

Hey nice work. although i have a suggestion, in the following line

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ-

here its not பேர்குரைக்காயோ instead its பேர் சூறைக்காயோ- is the right one..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கண்ணதாசனின் கவித்துவத்துக்கும், தமிழின் தனித்துவமான சிலேடைக்கும், குரல், இசை என யாவும் ஒருங்கே அமைந்த என்றென்றும்; எனக்கும் இனிய பாடலிது.
ஏங்கும் இந்த ஏழைக்காய்
தூதுவளங்காய்
பேர்ருரைக்காயோ என வருவதே பொருத்தமெனக் கருதுகிறேன்.

உமாசங்கர் said...

@Jeeves:
அருமை. 70களில் கண்ணதாசன் வானொலியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் சொன்ன விளக்கம் கிட்டத்தட்ட இதுதான். இது நிலா விடு தூது வகை பாடல். பாமரகளுக்கு எழுதப்பட்ட பாடல்களுக்கு இடையில் படித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள எழுதப்பட்ட பாடல். பொருள் ஈட்ட தொலை தூரம் சென்றிருக்கும் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் நிலவை தூது விட்டு பாடும் பாடல்.

அத்திக்காய் காய் காய் - என் கணவர் இருக்கும் அந்த திக்கிலே காய்வாயாக.
ஆலங்காய் வெண்ணிலவே - விஷம் போல் காய்கின்ற வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ - நான் இருக்கும் இந்த திக்கிலே காயாதே, நீ என்னை போல ஒரு பெண் தானே

Chezhian said...

அருமை

Last 25 songs posted in Thenkinnam