நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
(நலம்)
தீண்டவரும் காற்றினையே
நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே
நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே
(நலம்)
கோவிலிலே நான் தொழுதேன்
கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன்
காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே
(நலம்)
பாடல்: நலம் நலமரிய ஆவல்
குரல்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வாலி
Wednesday, September 3, 2008
676 : நலம் நலமறிய ஆவல்....!
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 9:37 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment