பூந்தளிராட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றைக்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் - இனி
நாடும் சுபகாலங்கள்
(பூந்தளிராட பொன்மலர் சூட)
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்
(பூந்தளிராட பொன்மலர் சூட)
பூமலர் தூவும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
(பூந்தளிராட பொன்மலர் சூட)
படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
Saturday, September 6, 2008
683. பூந்தளிராட பொன்மலர் சூட
பதிந்தவர் கப்பி | Kappi @ 5:20 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment