Tuesday, September 23, 2008

724. என்னைத் தெரியுமா?




என்னைத் தெரியுமா..... ?
என்னைத் தெரியுமா..
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
வாழ்வை சோலையாக்கலாம்..
இந்தக் காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
( என்னை )

படம்: குடியிருந்த கோவில்
இசை: MS விஸ்வநாதன்

ஒரு சிலையக் கண்டேனே
அது சிரிக்கக் கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா.. நேரிலே இரு நிலா
காதல் அமுதைப் பொழியலாம்..
அவள் அருகில் வந்து பழக
நான் மெழுகைப் போல உருக
இதழ் பிழியப் பிழிய தேனை எடுத்து எனக்குத் தந்தாளே
கொடுத்ததை நினைக்கலாம்
கொடுத்தவள் மறக்கலாம்..
( என்னை )

படம்: குடியிருந்த கோவில்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: வாலி

2 Comments:

Unknown said...

யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))

MyFriend said...

//ஸ்ரீமதி said...

யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))//

தங்கச்சி..

---
என்ன பாட்டுன்னு சொல்லுங்க. போட்டு அசத்திப்புடலாம். ஆனா MS விஸ்வநாதன் இசைன்னா இந்த வாரத்துலேயே கேட்கலாம்.

மத்தவங்கன்ன்னா இந்த வார இறுதிக்கு வெயிட் பண்ணனும். ஓக்கே வா? :-)

Last 25 songs posted in Thenkinnam