Thursday, September 18, 2008

706. மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது





மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

4 Comments:

நாமக்கல் சிபி said...

குட் சாங்க்! தாங்க்ஸ் மை பிரண்ட்

ஆயில்யன் said...

//வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே///


அருமையான வரிகள்!

மனதை வருடும் மெல்லிய இசையோடு வரிகள் ஆக்ரமித்த அழகிய பாடல்!

நன்னி மை ஃப்ரெண்ட்!

MyFriend said...

@சிபி அண்ணா:

நன்னி நன்னி :-)

@ஆயில்ஸ்:

ஹீஹீ.. உங்களுக்கு மிகவும் பிடிச்ச பாட்டுன்னு அடிக்கடி சொல்வீங்கல்ல. அதான், மணிரத்னம் வாரத்துல மறக்காமல் போட்டுட்டேன். ;-)

விரும்பி கேட்டவர்ன்னு உங்க பேர் மிஸ் ஆகிடுச்சு. இப்போ போட்டுடுறேன். ;-)

Anonymous said...

என்மனதில் நல்ல இசை, பாடல்வரிகள் என நினைத்த அனைத்து பாடல்களையும் இந்த வலைப்பதிவில் காண முடிகிறது. இதற்காக பங்களிக்கும் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் !

பாடல்களை சேர்க்கும் பொழுது அதன் பாடலாசிரியரின் பெயரையும் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

Last 25 songs posted in Thenkinnam