ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண்மூட
(ஆராரோ ஆராரோ)
தென்றல் வந்து சேர்ந்ததென்ன
எந்தன் முன்னே பார்த்ததென்ன
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கைதான் கெஞ்சத்தான்
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்
(ஆராரோ ஆராரோ)
மாலை சூடும் மாலை நேரம்
மலை போலக் கூடவேண்டும்
ஏதேதோ மோகம் தான்
என்னுள்ளே தாகம்தான்
எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க
(ஆராரோ ஆராரோ)
படம்: ஆனந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: லதா மங்கேஷ்கர்
***
இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
Sunday, September 28, 2008
728. ஆராரோ ஆராரோ
பதிந்தவர் கப்பி | Kappi @ 12:25 PM
வகை 1980's, இளையராஜா, லதா மங்கேஷ்கர்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நல்ல பாட்டு..!! :))))
Post a Comment